முதன்முறையாக இன்று ரூ.1700 பெறும் தோட்டத் தொழிலாளர்கள்!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

எல்கடுவ பெருந்தோட்ட நிர்வாகத்தின் கீழ் இயங்கும் தோட்டங்களின் தொழிலாளர்களுக்கு இன்று முதன்முறையாக 1700 ரூபாய் சம்பளம் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அண்மையில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பரிந்துரைக்கமையஅரசாங்கத்தினால் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை 1700 ரூபாய் உயர்த்த வேண்டும் என்று வர்த்தமானி வெளியிடப்பட்டிருந்தது.

இதற்கு பல்வேறு பெருந்தோட்ட நிறுவனங்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்ததுடன்வழக்கும் தொடர்ந்தன.

இந்த நிலையில் மாத்தளையிலுள்ள எல்கடுவ பெருந்தோட்ட நிறுவனத்தின் கீழ்பணியாற்றும் ஊழியர்கள் இன்று 1700 ரூபாய் சம்பளம் பெறவுள்ளனர்.

முன்னதாக பெருந்தோட்ட ஊழியர்களுக்கு முதன்முதலாக 1000 ரூபாய் சம்பளம்கொடுத்த நிறுவனமும் இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Article