புங்குடுதீவு முடக்கம் தளர்வுக்கு வந்தது

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

புங்குடுதீவில் அமுல்ப்படுத்தப்பட்ட தற்காலிக முடக்கம் இன்று (20) காலை முதல் தளர்த்தப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்துள்ளார். மேலும்,

“கடந்த மூன்று வாரங்களாக புங்குடுதீவு பகுதி தற்காலிக முடக்கத்திற்கு உள்ளாக்கப்பட்டிருந்த நிலையில் அப்பகுதியில் சுய தனிமைப்படுத்தப்பட்டவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனைகளில் எவருக்கும் தொற்று ஏற்படவில்லை.

இதன்காரணமாக புங்குடுதீவு பகுதியானது முடக்கத்திலிருந்து விடுவிக்கப்பட்டு உள்ளது. அப்பகுதி மக்கள் சுகாதார நடைமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும். எனவும் அப்பகுதிக்கு சென்று வரும் பொது மக்களும் சுகாதார நடைமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும்.” – என்றார்.

Share this Article