புங்குடுதீவு படுகொலைக்கு எதிரான வீதி மறியல் போராட்டம் – தீவக சிவில்சமூகத்தினர் உட்பட ஐவருக்கு பிணை!!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

புங்குடுதீவு முதலாம் வட்டாரத்தில் கடந்த ஓக.10 இல் இடம்பெற்ற தனியார் பஸ் உரிமையாளரின் படுகொலை சம்பவம் தொடர்பான கொலைக்குற்றவாளிகளைகைது செய்வதில் ஊர்காவற்துறை பொலிசார் பின்னடிப்பதை  கண்டித்து ஓகஸ்ட்15 இல் புங்குடுதீவு பிரதான வீதியில் நடைபெற்ற  வீதி மறியல் போராட்டத்தினை  தலைமையேற்று நடாத்தியதாக குற்றம் சுமத்தி ஊர்காவற்துறை பொலிசாரால்ஊர்காவற்றுறை நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்றையதினம் (ஒக். 08) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

பொலிசாரால் குற்றம் சுமத்தப்பட்ட  தீவக சிவில் சமூக செயலாளர்மாணிக்கவாசகர் இளம்பிறையன், உப தலைவர் கருணாகரன்  குணாளன், வேலணை பிரதேச சபை உறுப்பினர் கருணாகரன் நாவலன் மற்றும் இருபொதுமக்கள் என ஐவரும் நீதிமன்றில் முன்னிலையாகிய நிலையில் ஐவரும் பிணையில்  விடுதலை செய்யப்பட்டதுடன் குறித்த வழக்கு பிறிதொரு திகதிக்குஒத்திவைக்கப்பட்டது. இவர்கள் சார்பாக  நீதிமன்ற பணிப்புறக்கணிப்புகாரணமாக சட்டத்தரணிகள் எவரும் ஆஜராகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது .

இந்நிலையில் இப்படுகொலை சம்பவம் தொடர்பில் தேடப்பட்ட மூன்று  சந்தேகநபர்களில் ஒருவரான அனலைதீவை சேர்ந்த அமிர்தலிங்கம் செல்வகுமார்என்பவர் கடந்த செப்டம்பர் 10 ஆம் திகதி கைதுசெய்யப்பட்டிருந்தார். இன்றையதினம் ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தபட்ட செல்வகுமாரை  எதிர்வரும் 21 ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதிஉத்தரவிட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

Share this Article