புங்குடுதீவு நலன்புரிச்சங்கத்தினருக்கும் யாழ்மாவட்ட அரச அதிபருக்குமான சந்திப்பு இன்று (OCT – 31) யாழ்ப்பாணம் கச்சேரியில் நடைபெற்றது
இச் சந்திப்பில் புங்குடுதீவு நலன்புரிச்சங்கத்தினரால் புங்குடுதீவில் உடனடியாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய செயற்பாடுகள் சம்பந்தமாக கலந்துரையாடப்பட்டது.
1) ஆடைத் தொழிற்சாலை (காமன்ஸ்) ஒன்றை நிறுவி வேலை வாய்ப்பினை வழங்குதல்
2) கட்டாக்காலி கால்நடைகளை பண்ணை அமைத்து பாதுகாத்து ஆர்வமுள்ளவர்களை இனங்கண்டு வாழ்வாதார உதவியாக வழங்கி பராமரித்தல்.
3) தீவகத்திலேயே புங்குடுதீவில் காணப்படும் மதுபானச்சாலையை இடம் மாற்றுதல்
4) புங்குடுதீவிற்கு தற்போதய சூழ் நிலையயை எதிர் கொண்டு பணியாற்றுகின்ற அரச ஊழியர்களுடன் இணைந்து பணியாற்றக்கூடிய கிராம மட்ட உத்தியோகத்தர்களை நியமித்தல்
5) உவர்நீரை நன்னீர் ஆக்கும் திட்டம் (R O பிளாண்ட்)
6) புங்குடுதீவில் தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா பேரிடர்காலத்திலும் சமூகத்திற்கு கேடு விளைவிக்கும் போதையூட்டும் பொருட்களை சமூக அக்கறை கருதி தடைசெய்தலுக்கான அனுமதி போன்ற விடயங்கள் கலந்துரையாடப்பட்டது.
கருத்துக்களை உள்வாங்கிய அரச அதிபர் ஆக்கபூர்வமான செயற்திட்டங்களை நடைமுறைப்படுத்த உரிய துறைசார் அதிகாரிகளை சந்திக்க ஆவன செய்து தருவதாக உறுதியளித்து புங்குடுதீவு நலன்புரிச்சங்கத்தினரின் செயற்பாடுகளில் ஒன்றான மூதாளர் ஓய்வூதியத்திட்டத்தை வெகுவாக பாராட்டினார்