புங்குடுதீவில் கடந்த ஓகஸ்ட் 08 அன்று தனியார் பேருந்து உரிமையாளர் அகிலன்என்பவரை கொடூரமாக வெட்டிக் கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட முக்கிய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கும்பலொன்றின் பிரதான சந்தேக நபரான அனலைதீவை சேர்ந்த குறித்த நபர் நேற்று (செப். 14) மதியம் முல்லைத்தீவு மாவட்டத்தில்தென்னியன்குளம் காட்டு பகுதியொன்றில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தார்.
அந்நபர் வழங்கிய வாக்குமூலத்திற்கு இணங்க புங்குடுதீவு நான்காம்வட்டாரத்தில் வசிக்கும் நபரொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.