புங்குடுதீவில் பெண் கடற்படை சிப்பாய் சக சிப்பாயால் பாலத்காரம்!!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

புங்குடுதீவு கடற்படை முகாமில் கடமையாற்றும் பெண் கடற்படை சிப்பாயை பாலியல் பலாத்காரம் செய்த குற்றச்சாட்டில் கைதான கடற்படை சிப்பாய் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

புங்குடுதீவு கடற்படை முகாமில் கடமையாற்றும் பெண் சிப்பாய் ஒருவர் முகாமில் உள்ள பெண்கள் தங்குமிடத்தில் ஓய்வெடுத்துக்கொண்டிருந்த வேளை, அங்கு அத்துமீறி நுழைந்த கடற்படை சிப்பாய் பெண்ணிடம் அத்துமீறி நடந்து, பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகியுள்ளார்  

சம்பவம் தொடர்பில் ஊர்காவற்றுறை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு சந்தேகநபரான கடற்படை சிப்பாய் மற்றும் பாதிக்கப்பட்ட பெண் கடற்படை சிப்பாய் ஆகிய இருவரையும் சட்டவைத்திய அதிகாரி முன் முற்படுத்தினர்.

அதனை தொடர்ந்து சந்தேக நபரான கடற்படை சிப்பாயை ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் நேற்றைய தினம் (ஒக். 02) முற்படுத்திய வேளை சந்தேகநபரை எதிர்வரும் ஒக். 16 வரையில் விளக்கமறியலில் வைக்குமாறும், சந்தேக நபரை மனநல வைத்திய அதிகாரி முன் முற்படுத்தி மருத்துவஅறிக்கையை பெறுமாறு மன்று பொலிஸாருக்கு கட்டளையிட்டதுடன், முறைப்பாட்டின் உண்மை தன்மை குறித்தும் விரிவான விசாரணைகளை மேற்கொள்ளுமாறும் கட்டளையிட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

Share this Article