புங்குடுதீவில் சுகாதார நடவடிக்கைகளும் விசாரணைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

கம்பஹா மாவட்டம் மினுவாங்கொடையில் உள்ள ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றிவரும் யாழ்ப்பாணம் தீவகம் புங்குடுதீவைச் சேர்ந்த பெண்கள் இருவர் ஊர் திரும்பிய நிலையில் புங்குடுதீவில் சுகாதார நடவடிக்கைகளும் விசாரணைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

புங்குடுதீவு 12ஆம் வட்டாரம் பகுதியில் வசிக்கும் பெண்கள் இருவர் மினுவாங்கொடையில் இருந்து கடந்த வாரம் ஒருவரும் நேற்று முன்தினம் ஒருவரும் புங்குடுதீவில் உள்ள தமது வீடுகளுக்குத் திரும்பியுள்ளனர்.

அவர்கள் இருவரும் பேருந்துகளில் பயணம் செய்திருக்கின்றமையும் தெரியவந்துள்ளது.
இதனிடையே ஊர் திரும்பிய பெண்களின் வீட்டுச் சூழலில் இராணுவத்தினர், பொலிஸார் மற்றும் சுகாதாரத் திணைக்கள அதிகாரிகள் பிரசன்னமாகியுள்ளதுடன் தீவிர விசாரணை இடம்பெற்றுவருகின்றது.

Share this Article