பீடி இலைகளை சட்டவிரோதமாக கடத்த முயற்சித்த ஒருவர் கைது!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

புத்தளம் மாவட்டம் வண்ணாத்திவில்லு ஆலங்க தோனி கடற்கரைப் பகுதியில் பீடி இலைகளை சட்டவிரோதமாக கடத்த முயற்சித்த ஒருவர் நேற்று (ஓகஸ்ட் 4) அதிகாலை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சட்டவிரோதமாக பீடி இலைகளை முச்சக்கர வண்டியில் கடத்துவதற்கு முற்பட்டு வருவதாக வண்ணாத்திவில்லு பொலிஸாருக்குத் கிடைத்த தகவலுக்கமைவாக குறித்த பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் பீடி இலைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதன்போது, சுமார் 16 உறைகளில் 500 கிலோவிற்கும் அதிக எடையுடைய பீடி இலைகள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், பீடி இலைகளை கடத்துவதற்கு பயன்படுத்தப்பட்ட முச்சக்கர வண்டியும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சந்தேக நபர் காரைத்தீவுப் பகுதியைச் சேர்ந்தவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கைப்பற்றப்பட்ட பீடி இலைகள் சுமார் 50 இலட்சம் ரூபாவிற்கும் அதிக பெறுமதியானது என பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ,கைப்பற்றப்பட்ட பீடி இலைகள், பயன்படுத்தப்பட்ட முச்சக்கர வண்டி ஆகியன புத்தளம் மாவட்ட நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபரிடமிருந்து தொடர்ந்தும் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக வண்ணாத்திவில்லு பொலிஸார் தெரிவித்தனர்.

Share this Article