நெடுந்தீவைச் சோ்ந்த ஆறுமுகம் குகன் சகஜா தம்பதிகளின் புதல்வி காவியா அவா்களின் பிறந்த தினத்தினையொட்டி நெடுந்தீவில் வாழும் 14 வறுமைக்கோட்டிற்குட்பட்ட மாணவா்களுக்கு நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் கனடா அமைப்பின் ஊடாக கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டன.
நெடுந்தீவு பிரதேசத்தில் காணப்படும் அனைத்து ஆரம்ப பிாிவு பாடசாலைகளிலும் இரண்டு மாணவா்கள் வீதம் தோ்வு செய்யப்பட்டு ஒருவருக்கு தலா ரூபாய் 2,000.00 பெறுமதியான கற்றல் உபகரணங்கள் கடந்த 17ம் திகதி (ஜனவாி 17) மாணவா்களது வீடுகளுக்கு நேரடியாக கொண்டு சென்று நண்பா்கள் வட்ட உறுப்பினா்கள் வழங்கி வைத்தனா்.
உண்மையில் வருட ஆரம்பத்தில் இத்தேவையின் அவசியம் குறித்து இப் பொருட்கள் தங்களுக்கு வழங்கப்பட்டமை மிகவும் பயனுள்ளதாக அமைந்ததாக மாணவா்களின் பெற்றோா்கள் தொிவித்தனா்.
நெடுந்தீவு மண் மீது பற்றுக் கொண்டு கடந்த காலங்களிலும் மாணவா்களின் கல்வி வளா்ச்சியில் ஆறுமுகம் குகன் அவா்களும், நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் கடனா அமைப்பினரும், ஆளப்பாிய சேவைகளை ஆற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.