பிரதான வீதியின் குன்று குழிகள் தற்காலிகமாக நிரப்பபடுகின்றது.
நெடுந்தீவு பிரதான வீதி நீண்ட நாட்களாக திருத்தப்படாமையினால் தொடர்ச்சியாக மக்கள் பல்வேறு துன்பங்களை அனுபவித்து வருகின்றார்கள் கடந்த வருடம் பிரதான வீதி திருத்தப்படுவதற்கான வேலைகள் ஆரம்பிக்கப்பட்டபோதும் அவை யாவும் தற்போது நிறுத்தப்பட்டுள்ளது.
மாவிலித்துறைமுகத்தில் இருந்து 3.6 கிலோ மீற்றர் தூரத்திற்கு முதற்கட்டமாக கொங்கீறிற் வீதி அமைப்பதற்கான முதற்கட்ட பொருட்கள் இறக்கப்பட்ட போதும், வேலைகள் யாவும் தற்போது நிறுத்தப்பட்டுள்ளது.
தற்போது தொடர்ச்சியாக மழை பெய்து வருவதனால் பிரதான வீதியூடாக போக்குவரத்து செய்யும் மக்கள் குறிப்பாக பாடசாலை மாணவர்கள் பெரிதும் சிரமத்தினை எதிர்கொண்டு வருகின்றார்கள் பாடசாலைக்கு செல்லும் மாணவர்கள் பாதணி அணிந்து நடந்து செல்ல முடியாத நிலமையே காணப்படுகின்றது.
இவ் நிலமைகளைக் கருத்திற் கொண்டு நெடுந்தீவு பிரதேச சபை தவிசாளரின் முயற்சியில் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் அனுமதியுடன் வெள்ளம் தேங்கி நிற்கும் இடங்களில் மண் போட்டு தற்காலிகமாக போக்குவரத்து செய்யும் நிலமையேற்படுத்தப்படுகின்றது.
புpரதான வீதி 2022;ம் ஆண்டிலாவது திருத்தப்படுமா? என்பது நெடுந்தீவு மக்களின் கேள்வியாக இருக்கின்றது. வீதி புனரமைக்கப்படாமையினால் மக்கள் மடடுமன்றி வாகனங்கள் யாவும் அடிக்கடி பழுதடைகின்ற தன்மையேற்படுகின்றது.