பிரதமர் அலுவலகத்தின் செலவுகள் குறைக்கப்பட்டுள்ளதாக பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 2021 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2022 ஆம் ஆண்டில் பிரதமர் அலுவலகத்தின் செலவுகள் 21% ஆகவும், 2023 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்திற்குள் 46% ஆகவும் குறைக்கப்பட்டுள்ளன.
2021ஆம் ஆண்டில் 1661.7 மில்லியன் ரூபாவாக இருந்த பிரதமர் அலுவலகத்தின் செலவு 2022 இல் 1310.4 மில்லியன் ரூபாவாக இருந்தது.
2023ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதத்திற்குள் அந்த எண்ணிக்கை 705.7 மில்லியன் ரூபாவாகக் குறைக்கப்பட்டுள்ளது.
பிரதமர் அலுவலகத்திற்கு வரும் கடிதங்களுக்கு பதில் அனுப்பும் முறையை டிஜிட்டல் மயமாக்கியதால், தபால் மற்றும் தகவல் தொடர்பு செலவுகளை 36% குறைக்க முடிந்துள்ளது.
அத்துடன் 2022ஆம் ஆண்டு பிரதமர் அலுவலகத்தில் 178 வாகனங்கள் இருந்தாலும், 2023ஆம் ஆண்டு இறுதிக்குள் சேவைத் தேவைகளுக்குப் போதுமான 125 வாகனங்கள் மட்டுமே உள்ளன என குறிப்பிட்டுள்ளார்.