பிணத்தை தோண்டி எடுக்க முயற்சி வல்வெட்டித்துறையில் இருவர் கைது

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

தங்க நகைகள் இருப்பதாக கருதி பிணத்தை தோண்டி எடுக்க முயற்சி வல்வெட்டித்துறையில் இருவர் கைது

வல்வெட்டித்துறை ஊரிக்காடு மயானத்தில் சடலத்தில் உள்ள தங்க நகை எடுப்பதற்காக பிணத்தை தோண்டி எடுக்க முயன்ற இருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு 8.30 மணியளவில் குறித்த இருவரும் ஊரிக்காடு மயானத்தில் புதைக்கப்பட்ட சடலத்தில் தங்க நகை இருப்பதாக கூறப்பட்டதை நம்பி சடலத்தில் இருந்து நகைகளை பெறுவதற்காக சடலம் புதைத்த இடத்தை தோண்டியுள்ளனர்.

இந்நிலையில் இருவர் மயானத்தில் சந்தேகத்திற்கிடமாக கிடங்கு தோண்டுவதாக இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து வல்வெட்டித்துறை பொலிஸாரும் இராணுவத்தினரும் இணைந்து அப்பகுதியை சுற்றி வளைத்தனர்.

இதன் போது இருவர் கைது செய்யப்பட்டு வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

Share this Article