பாடசாலை மாணவர்கள் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனரா என்பதைகண்டறிய விசேட கணக்கெடுப்பு நடத்தப்படும் என சமூக மருத்துவ நிபுணர்ஷெரின் பாலசிங்கம் தெரிவித்துள்ளார்.
பாடசாலை குழந்தைகளைக் மையப்படுத்தி நடத்தப்பட்ட சோதனையில், உடல்பருமன், உயரத்துக்கு ஏற்ற எடை இல்லாமை ஆகிய இரண்டு காரணிகள்ஆராயப்பட்டதாகவும், நகர்ப்புறங்களில் உள்ள பெரும்பாலான குழந்தைகள்இந்த ஆபத்துக் காரணிகளால் உயிரிழந்து இருப்பது தெரியவந்ததாகவும் அவர்கூறினார்.
மேலும், பாடசாலை சிற்றுண்டிச்சாலைகளில் விற்பனை செய்யப்படும் உணவுதொடர்பில் சுகாதார அமைச்சினால் முன்னர் தயாரிக்கப்பட்ட ஆலோசனைதொடர் தற்போது செயலிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
மேலும் கல்வி அமைச்சின் செயலாளரின் நேரடித் தலையீட்டை முறையாகதயாரித்து வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாக சமூக மருத்துவ நிபுணர்ஷெரின் பாலசிங்கம் குறிப்பிட்டுள்ளார்.