நெடுந்தீவு மகாவித்தியாலயத்தின் பாடசாலைத் தினம் நேற்றைய தினம் (ஜனவாி 20) மிக சிறப்பாக இடம் பெற்றது.
காலையில் இந்து ஆலயத்தின் வாயிலில் பொங்கல் நிகழ்வு சிறப்பாக இடம் பெற்றதுடன் தொடா்ச்சியாக பாடசாலையில் ஒவ்வொரு வகுப்ப மாணவா்களும் தங்கள் வகுப்பறைகளை அலங்காித்து அதிபா் ஆசிாியா்களை அழைத்து அவா்களை உபசாித்து கனம் பண்ணும் நிகழ்வாக இது இடம் பெற்றது.
வருடம் தோறும் பாடசாலை ஆரம்பித்த தினமான ஜனவாி மாதம் 17ம் திகதி பாடசாலைத்தினமாகவும் பாிசளிப்பு நிகழ்வாகவும் கடந்த காலங்களில் இடம் பெற்று வந்தது இவ்வருடம் வித்தியாலயத்தின் 75வது ஆண்டு நிறைவாகையால் அதனை கோலகலாமாக கொண்டாடி 75வது ஆண்டு நிறைவு மலரை வெளியீடு செய்ய வேண்டும் என எண்ணிய போதும் கொரோனா வைரஸ் தாக்கததின் அதற்கு இடம் கொடுக்கவில்லை எனவும் இவ்வாண்டின் நடு்ப்பகுதியில் வைரஸ் தாக்கத்தின் நிலமையினைக் கருத்திற் கொண்டு நடாத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுவதாகவும் பாடசாலை அதிபா் அவா்கள் தொிவித்துள்ளாா்.
இவ்வருடம் அனுமதிகள் கிடைக்கப்பெறாமையில் பாிசளப்பு நிகழ்வு இடம் பெறவில்லை இன்றைய தினம் பாடசாலைத் தினமாக அனுஷ்டிக்கப்பட்டது.