பாடசாலை ஆசிரியர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது!!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

பாடசாலை ஆசிரியர் ஒருவர் 3.2 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் இன்று (12.06) காலை கிண்ணியா போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கிண்ணியா குறிஞ்சாக்கேணி அரபா ஆண்கள் மகா வித்தியாலயத்தில் ஆசிரியராகப் பணியாற்றி வரும் ஒருவரே இவ்வாறு நடுத்தீவு  ஆயுர்வேத வைத்தியசாலைக்கு முன்பாக 3.2 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் கைதாகியுள்ளார்

சிவில் பாதுகாப்பு குழுவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் இன்று காலை திடீர் சோதனை நடவடிக்கையை மேற்கொண்ட போதே இவர் சிக்கியுள்ளார்.

பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளின் போது, இந்த ஆசிரியர் நீண்டகாலமாக போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்துள்ளார் என்பது அம்பலமாகியுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த கிண்ணியா போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் தீவிர ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share this Article
Leave a comment