பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
உடல்நிலை அச்சப்படும் நிலையில் இல்லை என அவரது மகன் எஸ்.பி.பி. சரண் தெரிவித்துள்ளார். அத்துடன் மருத்துவமனையில் . சிகிச்சை பெறும் படத்தையும்வெளியிட்டுள்ளார்

பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்திற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவரது மனைவி சாவித்ரிக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அவர் மரணித்ததாக தற்போது வதந்தியான செய்திகள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் விரைவில் குணமடைய ரசிகர்கள் அனைவரும் தன்னுடன் சேர்ந்து பிரார்த்திக்குமாறு ஏ.ஆர்.ரகுமான் வேண்டுகோள் விடுத்துள்ளார்

Share this Article