பாசையூரில் சாதனை படைத்த மாணவர்கள் கௌரவிப்பு

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

யாழ்ப்பாணம், பாசையூரில் கல்வித்துறையில் சாதனை படைத்த மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் நேற்று (பெப்ரவரி 26) கௌரவிப்பு நிகழ்வு நடத்தப்பட்டது.

வெளிநாடுகளில் உள்ள தண்டர்ஸ் கழக உறுப்பினர்களின் நிதி பங்களிப்புடன் பாசையூர் தண்டர்ஸ் கழகம் வருடாந்தம் இந்தக் கௌரவிப்பு நிகழ்வை முன்னெடுத்து வருகின்றது.

நேற்று கௌரவிப்பு நிகழ்வுகள் பாசையூர் புனித அந்தோனியார் ஆலயத்தில் இடம்பெற்றன.

2021/2022ம் ஆண்டுகளில் புலமைப் பரிசில், க.பொ.த சாதாரண தரம் மற்றும் க.பொ.த உயர்தரம் போன்ற பரீட்சைகளில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்கள் மற்றும் பளுதூக்கல் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்கள் கௌரவிக்கப்பட்டனர்.

பாஷையூர் புனித அந்தோனியார் ஆலய திருப்பலி நிறைவில் பங்குத்தந்தை ஜெறோ செல்வநாயகம் அடிகளார், அருட்தந்தை ஜஸ்ரின், முன்னாள் பத்திரிசியார் கல்லூரி ஆசிரியர் குலசேகரம் பெர்னாண்டோ, வெலிச்சோர் மிக்கேல் மற்றும் முன்னாள் தண்டர்ஸ் கழக தலைவர் பிரான்சிஸ் யூட் கொலினால் கௌரவிக்கப்பட்டனர்.

Share this Article