வடமராட்சி கிழக்கு கேவிலில் இருந்து பருத்தித்துறை நோக்கி புறப்பட்ட அரசபேருந்து நேற்று (ஒக். 03) பழுதடைந்து வீதியின் இடை நடுவில் நின்றதால்பயணிகள் அந்தரித்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,
நேற்று அதிகாலை கேவிலில் இருந்து பருத்தித்துறை நோக்கி புறப்பட்ட அரசபேருந்து மருதங்கேணியில் பழுதடைந்து நின்று பழுது பார்த்த பின்னர்அங்கிருந்து புறப்பட்ட குறித்த பேருந்தானது மீண்டும் இடை நடுவேபழுதடைந்தது.
பின்னர் அங்கிருந்து பருத்தித்துறை நோக்கி பயணிகளை ஏற்றிக் கொண்டுமீண்டும் தனது பயணத்தை ஆரம்பித்தது. மீண்டும் அதே பேருந்துபருத்தித்துறையில் இருந்து கேவில் நோக்கி நேற்று மாலை புறப்பட்டது.
அதிகளவான பயணிகளை ஏற்றி வந்த குறித்த பேருந்து மீண்டும் நாகர்கோவில்பகுதியில் பழுதடைந்தது. இதனால் குடாரப்பு தொடக்கம் கேவில் வரை செல்லவேண்டிய பயணிகள் சிரமத்திற்கு உள்ளாகினர். இதன்போது இரவு வேளையில்குழந்தைகளுடன் பலர் வீதியில் தரித்துநின்றதைக் காணக்கூடியதாகஇருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
வடமராட்சி கிழக்கு மக்கள், வடமராட்சி கிழக்கு பகுதிக்கு சிறந்த தரமான ஒருபேருந்து சேவை ஒன்றை வழங்குமாறு ஒருங்கிணைப்பு குழு கூட்டம் போன்ற பலசந்தர்ப்பங்களில் கோரிக்கை விடுத்தனர். அண்மையில் வடமராட்சி வடக்குபிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டத்திலும் குறித்த விடயம் தொடர்பாகபேசப்பட்டபோது. இதன்போது, நல்ல நிலையிலுள்ள பேருந்தை வடமராட்சிகிழக்கிற்கான சேவையில் ஈடுபடுத்துமாறு வடமராட்சி வடக்கு ஒருங்கிணைப்புகுழு தலைவர் ரஜீவன் உத்தரவிட்டிருந்தார். ஆனாலும் பருத்தித்துறை இலங்கைபோக்குவரத்து சாலை முகாமையாளர் எந்தவிதமான நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என மக்களால் குற்றம் சாட்டப்படுகிறது.
இந்த அவல நிலையை கருத்தில் கொண்டு, சிரமம் இன்றி சேவையில் ஈடுபடக் கூடிய நல்ல தரமான ஒரு அரச பேருந்தை சேவையில் ஈடுபடுத்துமாறு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.