பல நாள் திருடரை மடக்கிப் பிடித்த காங்கேசன்துறைப் பொலிஸார்!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

சுன்னாகம் மற்றும் தெல்லிப்பழை பொலிஸ் பிரிவுகளில் இடம்பெற்ற பல்வேறு கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடைய இரு சந்தேக நபர்கள் காங்கேசன்துறை மாவட்ட பொலிஸ் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் அளவெட்டி பகுதியில் பாடசாலை அதிபர் ஒருவரின் வீட்டுக்குள் புகுந்த திருடர்கள் சுமார் 5 லட்சம் பெறுமதியான இலத்திரனியல் பொருள்களைத் திருடிச் சென்றனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக காங்கேசன்துறை மாவட்ட குற்ற தடுப்பு பொலிஸ் புலனாய்வு பிரிவின் பொலிஸ் பரிசோதகர் நிதர்சன் தலைமையிலான பொலிஸ் குழுவினர், நடத்திய விசாரணைகளில் அளவெட்டி பகுதியை சேர்ந்த 21 வயது மற்றும் 25 வயதான இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருடப்பட்ட இலத்திரனியல் பொருள்களை சந்தேக நபர்களிடமிருந்து பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். கைதான சந்தேக நபர்கள் தெல்லிப்பழை பொலிஸாரிடம் கையளிக்கப்பட்டுள்ள நிலையில் தெல்லிப்பழை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

கைதான இருவரும் சுன்னாகம் – தெல்லிப்பழை பொலிஸ் பிரிவுகளில் இடம்பெற்ற பல கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புபட்டுள்ளனர் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

Share this Article