நல்லூர் கந்தனின் தேர்திருவிழா நாளான இன்று (ஓகஸ்ட் 21) முருகப்பெருமான்வள்ளி தெய்வானை சமேதரராய் தேரில் எழுந்தருளி பல்லாயிரக்கணக்கானபக்தர்களுக்கு அருட்காட்சி அளித்தார்.

இன்றைய தேர்த்திருவிழாவை காண நாட்டின் பல பாகங்களிலிருந்தும்வெளிநாடுகளிலிருந்தும் பல்லாயிரக்கணக்கான அடியவர்கள் கலந்துகொண்டுள்ளனர்.
அதேவேளை ஆயிரக்கணக்கான அடியவர்கள் அங்க பிரதட்சணம் செய்தும், நூற்றுக்கணக்கானவர்கள் காவடிகள் எடுத்தும் கற்பூர சட்டிகள் ஏந்தியும், சிதறுதேங்காய் உடைத்தும் தமது நேர்த்திக் கடன்களை நிறைவேற்றுகின்றனர்.


நல்லூர் கந்தனின் வருடாந்த மகோற்சவம் கடந்த ஜூலை29 கொடியேற்றத்துடன்ஆரம்பமான நிலையில் இன்று தேர் திருவிழா இடம்பெறுவதுடன் நாளைய தினம்காலை தீர்த்தோற்சவம் நடைபெறவுள்ளதுடன், மாலை கொடியிறக்கம்நடைபெறவுள்ளது.


