பருத்தித்துறையில் சுகாதார விதிமுறைகள் மீறல்: உணவகத்திற்கு 40 ஆயிரம் ரூபா அபராதம்

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

பருத்தித்துறையில் உள்ள உணவகமொன்றில், வெற்றிலை மென்றபடி உணவு பரிமாறியதற்கும், சுகாதார விதிமுறைகளை பின்பற்றாததற்கும், நீதிமன்றம் 40 ஆயிரம் ரூபா அபராதம் விதித்துள்ளது.

பருத்தித்துறை பொது சுகாதார பரிசோதகர் மேற்கொண்ட ஆய்வின் போது,

  • உணவு கையாளும் நபர் தனிநபர் சுகாதாரத்தை பேணாதது,

  • வெற்றிலை மென்றபடி உணவு பரிமாறியது,

  • ஊழியர்களுக்கு உடல்நலத்தகுதி உறுதிப்படுத்தும் மருத்துவச் சான்றிதழ் இல்லாமல் வேலைக்கு அமர்த்தியது போன்ற குற்றச்செயல்கள் வெளிச்சத்துக்கு வந்தன.

இதனைத் தொடர்ந்து, பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

வழக்கு விசாரணையின் போது, உணவக முகாமையாளர் மற்றும் சம்பந்தப்பட்ட ஊழியர் மன்றில் முன்னிலையாகினர். அவர்களை நீதிமன்றம் கடுமையாக எச்சரித்து, தலா 40 ஆயிரம் ரூபா அபராதம் விதித்தது.

Share this Article