யாழ்ப்பாணத்திற்கு உத்தியோபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள பிரதியமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் பனை மற்றும் பனை சார் கைத்தொழிலினை அபிவிருத்தி செய்வது தொடர்பாக நேற்றைய தினம் (09/02) பனை அபிவிருத்தி சபையின் பிரதான காரியாலயத்தில் பனை அபிவிருத்தி சபையின் தலைவர் மற்றும் அதிகாரிகளுடன் விசேட சந்திப்பொன்றினை மேற்கொண்டிருந்தார்.
இதன்போது 2025 ஆம் ஆண்டு பனை அபிவிருத்தி சபையின் வேலை திட்டங்கள் பற்றியும் அடைந்த அபிவிருத்தி தொடர்பாகவும் 2026 ஆம் ஆண்டுக்கான திட்டங்கள் பற்றியும் விரிவாக கலந்தாலோசிக்கப்பட்டது.
இச் சந்தர்ப்பத்தில் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் பவானந்த ராஜா, பாராளுமன்ற உறுப்பினர் ரஜீவன் , வட மாகாண கூட்டுறவு ஊழியர் ஆனைக் குழுவின் புதிய தலைவர் பிரகாஷ் அவர்களும் கலந்து கொண்டிருந்தனர்.
இக்கூட்டத்தில் பனை உற்பத்தியாளர்கள், பனை உற்பத்தி சார் ஏற்றுமதியாளர்கள், கூட்டுறவு சங்க உறுப்பினர்கள், மது வரி திணைக்கள அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.