பத்து வீத தொழுநோயாளர்கள் 14 வயதிற்குட்பட்ட சிறுவர்கள்!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

நாட்டில் தொழுநோயாளர்களில் 10 வீதமானோர் 14 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் என சுகாதார அமைச்சின் தொழுநோய் தடுப்புப் பிரிவு தெரி வித்துள்ளது.

சிறந்த முறையில் தொழுநோயைக் கட்டுப்படுத்தும் நாடொன்றில், சிறுவர் தொழுநோயாளர்களின் எண்ணிக்கை 4 வீதத்திற்கும் குறைவாகக் காணப்பட வேண்டும் என அந்தப் பிரிவின் விசேட வைத்திய நிபுணர் பிரசாத் ரணவீர குறிப்பிட்டுள்ளார்.

இந்த ஆண்டின் முதல் 9 மாதங்க ளில் ஆயிரத்து 155 தொழுநோயாளர்கள் நாட்டில் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.

இதில் 10 வீதமான தொழுநோயாளிகள் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளாக உள்ளனர். இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதில் புதிய முயற்சிகள் அவசியம் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

Share this Article