வேலணை பிரதேச சபையால் மேற்கொள்ளப்படும் தூய்மைப்படுத்தும் வேலைத்திட்டத்தின் ஓர் அங்கமாக பண்ணை ஊர்காவற்துறைபிரதான வீதியின் கரையோரங்களில் கொட்டப்பட்ட கழிவுகளை அகற்றும் வேலைகள் முன்னெடுக்கப்பட்டது.

யாழ்ப்பாணத்தில் இருந்து இவ் வீதிவழியாக சொல்வோர் கொண்டுவந்துகொட்டிக் கிடந்த பெருமளவான கழிவுப்பொருட்கள் இவ்வாறுஅகற்றப்பட்டுள்ளன.
இவ்வாறான செயற்பாடுகளை பிரதேச சபை நிர்வாகத்தினர் வன்மையாககண்டிப்பதோடு இனிவரும் நாட்களில் இவ்வாறான செயற்படுவோர் மீது கடும்நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.