நெல்லியடி, குஞ்சர் கடையடிச் சந்தியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் படுகாயம்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

நெல்லியடி, குஞ்சர் கடையடிச் சந்தியில் நேற்று(செப்ரெம்பர் 20) நடந்த விபத்தில் இளைஞர் ஒருவர் காயமடைந்துள்ளார்.

முட்டை ஏற்றி வந்த வாகனம் ஒன்றும், மோட்டார் சைக்கிளும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.

மோட்டார் சைக்கிளில் பயணித்த அச்சுவேலி, பத்தமேனியைச் சேர்ந்த 36 வயது இளைஞர் ஒருவரே விபத்தில் படுகாயமடைந்துள்ளார்.

இவர் பருத்தித்துறை ஆதார மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, பின்னர் அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இந்த விபத்துச் சம்பவம் தொடர்பாக நெல்லியடிப் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்

Share this Article