நெடுந்தீவைச் சேர்ந்த கில்மன் நோபட் தர்சிகாமேரி (வயது 25) என்ற இளம் தாய்நேற்றையதினம் (ஒக். 09) இரவு யாழ் போதனா வைத்தியசாலையில் பிரசவத்தின் போது மரணமடைந்ததுடன் , பிறந்த பெண் குழந்தை வைத்தியசாலை பராமரிப்பில் நலமுடன் உள்ளதாக வைத்தியசாலை வடரடாரங்கள் தெரிவிக்கின்றன.
செப். 30 அன்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் தாயின் உடல்நிலையினை கருத்தில் கொண்டு பிரசவிப்புக்கான சிகிச்சைகள் பின்தள்ளி வந்தநிலையில் நேற்று (ஒக்.09) காலை சிகிச்சைக்காக அழைக்கப்பட்ட நிலையில் இரவு வேளை குழந்தையினை பிரசவித்த நிலையில் தாய் இறந்துள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்
சம்பவம் இடம்பெற்ற உடனே இறப்புக்கான சரியான காரணம் , நேரம் என்பன தொடர்பாக உறவினர்களுக்கு வைத்தியர்களால் தெரிவிக்கப்படாமையால் உடலத்தை ஏற்க உறவினர்கள் மறுத்தநிலையில் தற்போது அந்த விடயம் தொடர்பில் வைத்தியசாலை வட்டாரங்கள் உரிய தகவல்களை உறவினர்களுக்கு வழங்கிய நிலையில் இறந்தவரின் உடலை பொறுப்பேற்க சம்மதம் தெரிவிக்கப்பட்டதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை நெடுந்தீவு பொலிசார், தீவக மரண விசாரணை அதிகாரி ஆகியோரின் விசாரணைகளை அடுத்து உடற்கூற்றுப் பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் உடலம் ஒப்படைக்கபடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.