நெடுந்தீவு வெல்லை வீதியூடாக சென்று வரும் மீனவர்களது வாழ்வாதாரத்தைகருத்தில் கொண்டு விரைவாக இதனை திருத்தம் செய்து தர வேண்டும் என 100 பேர் கையொப்பமிட்ட கோரிக்கை கடிதம் யூதா ததேயூ கடற்றொழிலாளர்சங்கத்தின் நிர்வாக உறுப்பினர்களால் வட மாகாண ஆளுநரிடம் நேரடியாகஒப்படைக்கப்பட்டுள்ளது.
வெல்லை வீதியானது நீண்ட காலமாக திருத்தப்படாமல் உள்ளதால் இதனை அதிகம் பயன்படுத்தும் மீனவர்கள், மற்றும் சுற்றுலா பயணிகள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இது விடயமாக ஆளுநர் உடனடியாக வீதி அபிவிருத்தி திணைக்களத்தோடுதொடர்பு கொண்டு தகவல்களை பெற்றதுடன் குறித்த வீதி திருத்தம் தொடர்பில் விரைவாக நடவடிக்கை எடுப்பதாக வாக்குறுதி அளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.