கொழும்பு மாவட்டத்தில் இருந்து நெடுந்தீவுக்கு சுற்றுலா வந்த 77 வயதான ஒருவர் தீடீர் சுகவீனம் காரணமாக மரணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நேற்றையதினம் (நவம்பர் 17) காலை 23 பேர் குழுவாக நெடுந்தீவுக்கு சுற்றுலாவிற்கு வந்து தங்கிநின்றவர்களில் கொழும்பைச் சேர்ந்த மில்ரர் சில்வா (வயது 77) என்பவரே இவ்வாறு இறந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நெடுந்தீவு மணல் கடற்கரை பகுதியில் மாலை நேரம் தங்கிநின்ற போது தீடீர் சுகவீனம் அடைந்ததால் நெடுந்தீவு பிரதேச வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் மரணமடைந்ததாகவும் தெரியவருகின்றது.
இறந்தவரின் சடலம் யாழ் போதனா வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மரண விசாரணைகளின் பின்னர் உறவினர்களிடம் உடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என வைத்தியசாலை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.