நெடுந்தீவு மக்களை சந்தித்து கலந்துரையாடுவதுடன், எதிர்வரும் உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் மக்கள் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சிக்கான வாக்களிப்பு அவசியத்தை தெளிவுபடுத்தும் நோக்கிலும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் டக்ளஸ் தேவானந்தா இன்று (ஏப்ரல் 26) நெடுந்தீவுக்கான விஜயத்தினை மேற்கொண்டுள்ளார்.
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி சார்பில் நெடுந்தீவு பிரதேச சபைக்கான வேட்பாளர்கள் அறிமுகம் இடம்பெற்று வருவதுடன் 8 வட்டார மக்களையும் நேரடியாக சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை நெடுந்தீவில் முன்னெடுக்கப்படவுள்ள சூரிய மின்சாரம் மற்றும் காற்றாலை மின்சாரம் உற்பத்திக்கான வேலைத்திட்டம் இடம்பெறும் இடத்தினையும் இன்றையதினம் நேரில் சென்று பார்வையிட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.