நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் – கனடா இன் 2024 -2025 ஆம் ஆண்டுக்கான 21வது நிர்வாக சபை தெரிவுக்கூட்டம் 2024 நவம்பர்10 அன்று கனடாதமிழ்க்கல்லூரி மண்டபத்தில் இடம்பெற்றது.
நிர்வாக தெரிவின் போது 6 நிறைவேற்று நிர்வாக உறுப்பினர்களும், 9 நிர்வாகஉறுப்பினர்களுமாக மொத்தம் 15 பேரும், போஷகர் மற்றும் கணக்காய்வாளர்ஆகியோரும் தெரிவு செய்யப்பட்டதுடன் நிரந்தர இயக்குனர் சபை உறுப்பினர் மூவரும் இந்த புதிய நிர்வாகத்தை வழிநடத்தும் வகையில் தெரிவுசெய்யப்பட்டனர்.
இதன்போது புதிய தலைவர் உட்பட புதிய நிர்வாகசபை உறுப்பினர்களின் முதல்உரைகளும் இடம்பெற்றது.
புதிய நிர்வாக சபை விபரம்.
தலைவர் இராஜராஜன் சுப்பிரமணியம்
செயலாளர் ஜெயப்பிரகாசன் குமாரசுவாமி
பொருளாளர் பங்கயற்செல்வி சிவகுமாரன்
உபதலைவர் செல்வரவீந்திரன் தர்மலிங்கம்
உபசெயலாளர் மனோகரி நாகமுத்து
உபபொருளாளர் சேரன் ஆறுமுகம்
நிர்வாக சபை உறுப்பினர்கள்
டொனால்ட் ஜெயரட்ணம்
மரியதாஸ் மரியாம்பிள்ளை
சர்வானந்தன் காங்கேசு
செல்வன் K.V
சிவா பேரம்பலம்
றதன் ரவீந்திரநாதன்
கேதீஸ்வரி மோகன் மதி
ஜெபா ஸ்ரீ
மதி கணேஷ்
போஷகர் முருகதாஸ் அமிர்தரட்ணராஜா
கணக்காய்வாளர் பரம் கந்தையா
நிரந்தர இயக்குனர் சபை உறுப்பினர்கள்
பேரின்பநாதன் ஆறுமுகம்
ஜேம்ஸ் சரஸ்வதி
ஈசன் குலசேகரம்
கனடாவில் வாழும் தமிழ் மக்கள் மத்தியில் ஆரம்ப காலத்தில் தோன்றிய ஊர்ச்சங்கங்களில் ஒன்று எனும் பெருமையை தனதாக்கிக்கொண்ட நெடுந்தீவு மக்கள்ஒன்றியம் – கனடா தனது முப்பதாவது ஆண்டில் கால்பதிப்பதுடன் கனடியமண்ணிலும் ஈழத்திலும் பல சமூகப்பணிகளையும், மக்கள்நலப்பணிகளையும் ஆற்றிவருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.