பாடசாலை மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கும் திட்டத்தில் நெடுந்தீவு மகா வித்தியாலயமும் உள்வாங்கப்பட்டு நேற்றையதினம் (ஆகஸ்ட் 05) தொடக்கம் உள்வாங்கப்பட்டு மாணவர்களுக்கான மதிய உணவு வழங்கப்பட்டுள்ளது.
பாடசாலை சமூகத்தின் பல்வேறுபட்ட விடாமுயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் தற்போது மாணவர்களுக்கான திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இத்திட்டத்தினை நடைமுறைப்படுத்த உதவிய முன்னைநாள் பிரதம செயலாளர் S.M.சமன் பந்துசேன, மாகாண கல்வி அமச்சின் செயலாளர் பற்றிக் நிரஞ்சன், முன்னைநாள் வட மாகாணக்கல்விப் பணிப்பாளர் ஜோன் குயின்ரஸ், யாழ் அரச அதிபர் ம. பிரதீபன் வடமாகாண பிரதிக் கல்விப் பணிப்பாளர் திரு கந்ததாஸன் நெடுந்தீவு பிரதேசசெயலாளர் நிவேதிகா கேதீசன் மற்றும் தீவக வலய கல்விப்பணிப்பாளர், பிரதிக்கல்விப் பணிப்பாளர்கள் மற்றும் தொடர்புடைய அனைவருக்கும் வித்தியாலய சமூகம் நன்றி தெரிவித்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கதாகும்.