நெடுந்தீவு மகா வித்தியாலயத்தின் 80வது ஆண்டு விழாவினை முன்னிட்டு மென் பந்து கிறிக்கெற் சுற்றுப்போட்டி இம் மாதம் 25 ஆம் திகதி சனிக்கிழமை முதல் ஆரம்பமாகவுள்ளது.
இவ் விளையாட்டு நிகழ்வுகளில் பாடசாலையின் பழைய மாணவர்கள் மாத்திரமேபங்கு கொள்ள முடியும் என்பதுடன் கல்வி கற்ற மாணவர்கள் அனைவரும்பழைய மாணவர் சங்கத்தில் அங்கத்துவம் பெற்று அங்கத்துவ இலக்கத்தினைபெற்றுக் கொண்டவர்கள் மாத்திரமே விளையாட்டு நிகழ்வுகளில் பங்கு கொள்ளமுடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மென் பந்து கிறிக்கெற் சுற்றுப்போட்டி ஆண்களுக்கானது வயது அடிப்படையாககொண்ட 04 குழுக்களாக இடம்பெறும்
குழு 01 – 30வயதிற்குட்பட்டோர்.
குழு 02 – 31 வயது முதல் 40வயது வரை
குழு 03 – 41 வயது முதல் 50 வயது வரை
குழு 04 – 50 வயதிற்கு மேற்பட்டோர்.
இவ்விளையாட்டு நிகழ்வுகளை மேற்கொள்வதற்கானஅனுசரணையாளர்களையும் அன்புடன் எதிர்பார்த்து நிற்பதுடன் ,மறைந்த உங்கள் குடும்ப அங்கத்தவர்களது நினைவாக இவ் 80வது ஆண்டுவிழாவினையொட்டிய அனுசரணையினை வழங்க முடியும் என விழாக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
தொடர்புக்கு…
திரு.ஐ.தயாபரன் 94774269166 வித்தியாலய முதல்வர், தலைவர், பழையமாணவர் சங்கம்
திரு.கு.ஜனேந்திரன் – 94770251033 செயலாளர், பழைய மாணவர் சங்கம்
திரு.ப.லீலியான் குரூஸ் – 94772105355 தலைவர், 80வது ஆண்டுநினைவுதின விளையாட்டு குழு