நெடுந்தீவு புனித அந்தோனியார் ஆலயத்தை சேர்ந்த ஏழு சிறார்கள் இன்றையதினம் (ஜூன் 08) முதல்நன்மை அருட்சாதனத்தை பெற்றுக்கொண்டனர்.
புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த நவநாள் திருப்பலி இடம்பெற்று வருகின்ற நிலையில் இன்றுகாலை முதல்நன்மை அருட்சாதனத்தை பெறும் நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது.
பங்குத்தந்தை அருட்பணி ப.பத்திநாதன் அடிகளாரின் ஒழுங்குபடுத்தலில்இடம்பெற்ற வழிபாட்டில் விழா திருப்பலியை அருட்பணி சோபன் றூபஸ்அடிகளார் தலைமையேற்று ஒப்புக்கொடுத்திருந்தார்.
ஆலய நிர்வாகத்தினர் இச்சிறார்களுக்கு வாழ்த்துக்களையும் , செபங்களையும்தெரிவித்துள்ளமை குறிப்பித்தக்கது.