நெடுந்தீவு பிரதேச செயலகப் பிரிவில் கலாசார அலுவல்கள் திணைக்களத்தின்அனுசரணையில் பன்னிரெண்டு மாத வேலைத்திட்டத்திற்கு அமைவான நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
இதன்படி நெடுந்தீவு றோமன் கத்தோலிக்க மகளிர் கல்லூரி மாணவிகளுக்கு கடந்த வெள்ளிக்கிழமை (ஒக்.10) களிமண்ணிலான உருவங்கள் மற்றும் கைவினைப்பொருட்கள் செய்வதற்கான பயிற்சி வழங்கப்பட்டது.
இதன்போது மாணவிகள் ஆர்வத்துடன் குறித்த பயிற்சி நெறியில் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.