“ரட்டம எகட – தேசிய நடவடிக்கை” திட்டம் ஆரம்பமாகவுள்ளது!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

போதைப்பொருள் அச்சுறுத்தலை முற்றாக ஒழித்து, போதைக்குஅடிமையானவர்களைப் பரந்த மக்கள் பங்கேற்புடன் புனர்வாழ்வளிப்பதைநோக்கமாகக் கொண்ட “ரட்டம எகட – தேசிய நடவடிக்கை” (Ratama Ekata – National Operation) எனும் அவசர துரித வேலைத்திட்டத்தைநடைமுறைப்படுத்த, தேசிய செயற்பாட்டுக் குழுவை அமைக்க அமைச்சரவைஒப்புதல் அளித்துள்ளது.

ஜனாதிபதி அனுரகுமாரவால் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்ட இந்தயோசனைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்தத் தேசிய இலக்கை அடைவதற்காகவே “ரட்டம எகட – தேசிய நடவடிக்கை” திட்டம் தொடங்கப்படவுள்ளது.

இதன் கீழ், பரந்த தகவல் பிரசாரம் மூலம் பொதுமக்களிடையே விழிப்புணர்வைஏற்படுத்துதல்.

போதைப்பொருள் கடத்தல் வலையமைப்புகளை முடக்குதல்.

போதைக்கு அடிமையானவர்களுக்குப் புனர்வாழ்வு அளிக்கும் வசதிகளைபலப்படுத்துதல்.

அடிமைத்தனத்திலிருந்து மீள விரும்பும் தனிநபர்களுக்கு ஆதரவளித்தல்.

பரந்துபட்ட பொதுமக்களின் பங்களிப்புடன் இந்த தேசிய நடவடிக்கையைவெற்றிகரமாகச் செயல்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது

Share this Article