நெடுந்தீவு பிரதேச செயலகத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்ட என். பிரபாகரன்அவர்களும், பருத்தித்துறை பிரதேச செயலகத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்டஎன்.திருலிங்கநாதன் அவர்களும் இன்றைய தினம் (ஓகஸ்ட் 25) காலைஅரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் முன்னிலையில் யாழ் செயலகத்தில் கடமையேற்றார்கள்.

இதன் போது மேலதிக அரசாங்க அதிபர் கே. சிவகரன் மற்றும் நிர்வாகஉத்தியோகத்தர் ஆ.சத்தியமூர்த்தி ஆகியோர் உடனிருந்தார்கள்.


மேலும் இன்றைய தினம் (25.08.2025) பருத்தித்துறை பிரதேச செயலகத்திற்குபுதிதாக நியமிக்கப்பட்ட திரு என். திருலிங்கநாதன் அவர்கள் தமது கடமையினைஇன்று பொறுப்பேற்றார் என்பதுடன், நெடுந்தீவு பிரதேச செயலகத்திற்கு நியமிக்கப்பட்ட திரு. என். பிரபாகரன் அவர்கள் தமது கடமையினை நாளைமறுதினம் கடமை நிலையத்தில் பொறுப்பேற்க்கவுள்ளார் என்பதும்குறிப்பிடத்தக்கது.