நெடுந்தீவு திருச்சுரேஸ்வரம் ஆலயத்தில் பூந்தோட்டம் அமைப்பு – நெடுந்தீவு பசுமை இயக்கம்

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

நெடுந்தீவு பசுமை இயக்கத்தால் நடைமுறைப்படுத்தப்படும்   “நந்தவனம்” திட்டத்தின் முதலாவது நிகழ்வாக நெடுந்தீவு  திருச்சுரேஸ்வரம் சிவன் ஆலயத்தில்  பூந்தோட்டம் அமைக்கும் பணி ஆரம்பமாகியுள்ளது.

கடந்த நவம்பர் 27 அன்று காலை திருச்சுரேஸ்வரம் சிவன் ஆலயத்தில்   பூஜை வழிபாடுகள் இடம்பெற்றதை தொடர்ந்து  ஆலய பிரதம குரு  கா.புவனேந்திரசர்மா அவர்கள் பூந்தோட்ட பணிகளை வைபவரீதியாக ஆரம்பித்து வைத்தார்.

தொடர்ந்து தேசத்துக்காக தம் உறவுகளை ஈகம் செய்த உறவினர்கள் மற்றும் நெடுந்தீவு பசுமை இயக்கத்தின்  அங்கத்தவர்கள் என பலர்  கலந்து கொண்டு பூக்கன்றுகளை நாட்டி வைத்தனர்.

Share this Article