நெடுந்தீவு சமுர்த்தி பிரிவினரால் முன்பள்ளி மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கல்!

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

நெடுந்தீவு பிரதேச சமுர்த்தி பிரிவினரால் சர்வதேச   எழுத்தறிவு தினத்தையொட்டி முன்பள்ளி மாணவர்களுக்கு  கற்றல் உபகரணங்கள்  வழங்கும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது

நெடுந்தீவு பிரதேச  செயலாளர்  ந.பிரபாகரன்  தலைமையில் நெடுந்தீவு பிரதேச  செயலக மண்டபத்தில் நேற்று (நவம்பர் 10) நடைபெற்ற நிகழ்வில் 129 சிறார்களுக்கு வழங்கப்படடது.

இந்நிகழ்வில் சமுர்த்தி தலைமையக முகாமையாளர் ந.நகுலராணி,  மகாசங்க முகாமையாளர் ந.சுதர்மினி, கருத்திட்ட முகாமையாளர் இ.இத்தினபாலன், சமுர்த்தி  வங்கி முகாமையாளர் கோ.பாமினி மற்றும் நெடுந்தீவு முன்பள்ளிகளின் இணைப்பாளர் ம.வசந்தசகாயராணி, முன்பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் ,சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ,பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் என  பலர்கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

Share this Article