நெடுந்தீவு கல்விக் கோட்டத்திற்கு உட்பட்ட பாடசாலைகளில் கடந்த வருடம் புலமைப் பரிசில் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களில் இருவர் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்று சித்தியடைந்துள்ளனர்.
நெடுந்தீவு சைவப்பிரகாச வித்தியாலய மாணவன் தனுசன் சர்ஜித் 169 புள்ளியைப் பெற்று நெடுந்தீவு கோட்டத்தில் முதல் இடத்தினை பெற்றுள்ளார்.
நெடுந்தீவு ஶ்ரீஸ்கந்தா வித்தியாலய மாணவன் சற்குணராசா பிரியந்தன் 149 புள்ளியைப் பெற்றுள்ளார்.
ஏனைய பாடசாலை மாணவரகள் பலர் சித்திப்புள்ளியான 70 இற்கு மேல் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.