நெடுந்தீவு குறிகாட்டுவான் இடையிலான தினசரி பகல் 11.30 படகுசேவையினை இன்றையதினம் (ஜனவரி03) தொடக்கம் சமுத்திரதேவா படகு மேற்கொள்வதற்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கரிகணன் பயணிகள் படகு புதுவருடப் பிறப்பு தினத்தில் சேவையின் போது பழுதடைந்தமையால் சேவையில் ஈடுபடவில்லை என்பதுடன் படகு திருத்தம் செய்யும் வரை நெடுந்தீவு பல நோ. கூ. ச. படகான சமுத்திரதேவா படகு சேவையில் ஈடுபடும் என தெரிவிக்கப்படுகின்றது.
கரிகணன் படகு சேவையானது நெடுந்தீவில் இருந்து பகல் 11:30 மணிக்குபுறப்பட்டு மாலை 2.30 மணிக்கு குறிகாட்டுவானில் இருந்து மீள திரும்பும் வகையில் சீராக இயங்கும் ஒரு பயணிகள்சேவை என்பது குறிப்பிடத்தக்கது.