நெடுந்தீவு கடற்பகுதியில் இன்று (டிசம்பர் 08) அதிகாலை சட்டவிரோதமாக மீன்பிடித்த குற்றச்சாட்டில் 8 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நடவடிக்கையின் போது, இரண்டு மீன்பிடி படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டதாக கடற்படை பேச்சாளர் தெரிவித்தார்.
கைதான மீனவர்கள் காங்கேசன்துறை துறைமுகத்துக்குக் கொண்டுவரப்பட்டு, பின்னர் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மயிலிட்டி மீன்வளப் பரிசோதகர் அலுவலகத்திற்கு ஒப்படைக்கப்படுவார்கள் என அவர் குறிப்பிட்டார்.