நெடுந்தீவை பூர்வீகமாக கொண்டு ஐக்கிய இராச்சியம் லண்டனில் இயங்கி வரும் நெடுந்தீவு ஒன்றியம் ஐக்கிய இராச்சியம் எனும் அமைப்பினர் தற்போது நடைமுறையில் உள்ள ஆறாவது நடப்பு நிர்வாகத்தினை கலைத்து ஏழாவது நிர்வாக சபையினை உருவாக்கவும் இவ் ஒன்றியத்திற்குள் புதிய இளைய சமுகத்தினையும் உள்வாங்கி சிறந்த முறையில் எதிர்காலத்தில் நிர்வாக அமைப்பினை கட்டியெழுப்பி செயற்பாடுகளை அதிகரிக்க லண்டன் வாழ் நெடுந்தீவு உறவுகளுக்க அழைப்பு விடுத்துள்ளனர்
கடந்த காலங்களில் ஒன்றியத்திற்கு ஆற்றி வரும் சேவைகளுக்க நன்றி தெரிவித்து நிற்பதுடன் எதிர்காலங்களில் தொடர்ந்தும் பங்காற்றவும், புதியவர்கள் இணைந்து நல் முறையில் செயற்படவும் அடுத்த சந்ததிக்கு கொண்டு செல்லும் நீண்டகால நோக்கிலும் அழைப்பு விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது
நெடுந்தீவினை பூர்;வீகமாக கொண்டு லண்டனில் வாழும் சொந்தங்கள் தலைவர் செயலாளருடன் தொடர்பு கொண்டு தங்களது பங்களிப்பை வழங்குமாறு நடப்பு நிர்வாகம் வேண்டி நிற்கின்றது.