நெடுந்தீவு ஊரும் உறவும் அமைப்பினால் நாற்று மேடைகளை அமைத்துமரக்கன்றுகளை உருவாக்கும் செயற்திட்டம் ஒன்றினை புத்தாண்டு தினத்தில் புதுப் பொலிவுடன் நேற்றையதினம் (ஜனவரி01) ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
தீவின் மண் வளத்தை அதிகரிக்க மரங்களை நட்டி வருகின்ற நிலையில் நெடுந்தீவிற்கு மரங்களை ஏற்றி வருவதற்கு பலசவால்கள் காணப்படுவதனால் நெடுந்தீவு ஊரும் உறவும் நிறுவனம் விதைகளை எடுத்து வந்து நாற்றுமேடைகளை அமைத்து மரங்களை உருவாக்கும் செயற்திட்டம் ஒன்றை “சூழலுடன் இணைவோம் சூழல் மாற்றத்தை சாதகமாக்கி நெடுந்தீவு மண்ணில் சாதனை செய்வோம்” எனும் குறிக்கோளுடன் புத்தாண்டு தினத்தில் அங்குரார்பணம் செய்துள்ளது.
ஊரும் உறவும் நிறுவன அலுவலக வளாகத்தில் இடம்பெற்ற நிகழ்வில் பணியாளர்கள் மற்றும் நிர்வாகத்தினர் இணைந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.