நெடுந்தீவில் முன்னெடுக்கப்படவுள்ள சூரிய ஒளி மின்சாரம் மற்றும் காற்றாலைமின்சாரம் உற்பத்திக்கான வேலைத்திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டுவரும் வேலைகள் தொடர்ந்து துரிதமாக இடம்பெற்று வருகின்றது.
இலங்கை இந்திய அரசுகள் ஏற்படுத்திக்கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்திய தனியார் நிறுவனத்தின் நிதி பங்களிப்புடன் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.