நெடுந்தீவில் நல்லிணக்க உறவுப்பாலம் – 2025 நிகழ்வு இன்று ஆரம்பம்!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் ஏற்பாட்டில்  நல்லிணக்க உறவுப்பாலம் – 2025  நிகழ்வு  யாழ் மாவட்ட இளைஞர் கழக சம்மேளனம் மற்றும் நெடுந்தீவு பிரதேச இளைஞர் கழக சம்மேளனம் ஆகியவற்றின் ஒழுங்கமைப்பில் நெடுந்தீவு மற்றும் கொழும்பு மாவட்டத்தின் இளைஞர் யுவதிகளும் இணைந்து நல்லிணக்க உறவுப்பாலம் – 2025 எனும் ஒன்றுகூடல் ஆரம்பமாகியுள்ளது

ஆரம்ப நிகழ்வு இன்று (நவம்பர்07) மாலை நெடுந்தீவு பிரதேச மண்டபத்தில் வைபவ ரீதியாக ஆரம்பமாகியுள்ளது

இதன்போது கொழும்பு மாவட்டத்தின் இளைஞர் யுவதிகள் நெடுந்தீவில் உள்ள இளைஞர் யுவதிகள் வீடுகளில் தனித்தனியாக தங்கிநின்று நெடுந்தீவு  மக்களது உணவு மற்றும் நடைமுறைகளை பழகிடும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

இன்று வெள்ளிக்கழமை (நவம்பர்07) முதல்  நவம்பர் 12 வரை 06 நாட்கள் கொண்ட கலை கலாசார பாரம்பரிய நிகழ்கள், விளையாட்டுக்கள், போன்றன இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share this Article