By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
kumuthini image kumuthini image
  • முகப்பு
  • செய்திகள்
    • நெடுந்தீவு
    • தீவகம்
    • யாழ்
    • வன்னி
    • இலங்கை
    • உலகம்
  • கட்டுரை
  • விளம்பரம்
    • வாழ்த்துக்கள்
    • எழுத்துரு விளம்பரங்கள்
  • அறிவித்தல்
    • இறப்பு அறிவித்தல்
    • துயர் பகிர்வு
Reading: நெடுந்தீவில் செஞ்சிலுவைச் சங்கத்தால் பல இலட்சம் ரூபாவில் உதவித்திட்டங்கள்
Share
Notification
Latest News
செம்மணியில் புதையுண்ட மக்களுக்கான நீதி போராட்டம் “அணையா தீபம்”!
யாழ்ப்பாணம்
இலங்கையில் இரண்டு மாதங்களுக்கான எரிபொருள் கையிருப்பு உள்ளது !
இலங்கைச் செய்தி
நயினாதீவுக்கான கட்டடப் பொருட்களை இறக்க மாற்று துறைமுகம்!
தீவகச் செய்தி
சிறப்பாக இடம்பெற்ற பெரியதம்பனை அறநெறி பாடசாலைக்கு அடிக்கல் நாட்டும் விழா!
வன்னிச் செய்திகள்
சாவகச்சேரி பிரதேசசபை தவிசாளர் தமிழ் அரசுக் கட்சி!
யாழ்ப்பாணம்
Aa
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....
Search
  • Home
    • Home News
  • Categories
  • Bookmarks
    • Customize Interests
    • My Bookmarks
  • More Foxiz
    • Blog Index
    • Sitemap
Follow US
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து.... > Blog > செய்திகள் > நெடுந்தீவு > நெடுந்தீவில் செஞ்சிலுவைச் சங்கத்தால் பல இலட்சம் ரூபாவில் உதவித்திட்டங்கள்
நெடுந்தீவு

நெடுந்தீவில் செஞ்சிலுவைச் சங்கத்தால் பல இலட்சம் ரூபாவில் உதவித்திட்டங்கள்

Last updated: 2021/06/16 at 12:03 PM
Published June 16, 2021 370 Views
Share
1 Min Read
SHARE

நெடுந்தீவில் செஞ்சிலுவைச் சங்கத்தால் பல இலட்சம் ரூபாவில் உதவித்திட்டங்கள்

நெடுந்தீவுப் பிரதேசத்தில் பல்வேறு உதவித்திட்டங்களை இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் மேற்கொண்டுள்ளதுடன் தற்போதும் கொரோனா நெருக்கடியினை கருத்தில் கொண்டு பல செயற்றிட்டங்களை முன்னெடுத்து வருவதாக இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் யாழ்.மாவட்ட பொருளாளரும் நெடுந்தீவு கிளைத் தலைவருமான எட்வேட் அருந்தவசீலன் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

யாழ்.மாவட்ட செஞ்சிலுவைச் சங்கமும் நெடுந்தீவு செஞ்சிலுவைச் சங்க கிளையும் இணைந்து குறித்த உதவித்திட்டங்களை முன்னெடுத்துள்ளன.

யாழ். புரவிப் புயலால் பாதிக்கப்பட்ட 1300 பேருக்கு 10000 ரூபா வீதம் நிதி உதவி வழங்கப்பட்ட நிலையில் நெடுந்தீவில் பாதிக்கப்பட்ட 75 பேருக்கு 10000 ரூபா வீதம் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் நெடுந்தீவுப் பிரதேசத்தில் 105 கிணறுகள் தூர்வாரி இறைத்துக் கொடுக்கப்பட்டுள்ளன.

நெடுந்தீவுப் பிரதேசத்தில் உள்ள சகல மகப்பேற்று தாய்மார்களுக்கான மகப்பேற்று பொருட்களும் குழந்தைகளுக்கான பராமரிப்பு பொருட்களும் வழங்கப்பட்டுள்ளன.

அதேவேளை தற்போதய கொரோனா நெருக்கடியினை கருத்தில் கொண்டு தெரிவு செய்யப்பட்ட வறுமைக்கோட்டுக்குட்பட்ட 94 குடும்பங்களுக்கு உணவற்ற பொருட்களும் தொழில் வாய்ப்பிழந்த வறுமைக்கோட்டுக்குட்பட்ட 43 குடும்பங்களுக்கு 10,000.00 ரூபா வீதம் வங்கியில் வைப்பிலிடப்பட்டுள்ளன.

அண்மையில் மருத்துவ முகாம் ஒன்றினை மிக சிறப்பாக மேற்கொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. இதற்கூடாக சில நோயளர்கள் நெடுந்தீவில் அடையாளம் காணப்பட்டு தொடர்சியாக சிகிச்சைகள் மேற்கொள்வதற்கான வழிவகைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

மேலும் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நெடுந்தீவுப் பிரதேச பொலிஸ் நிலையம், வைத்தியசாலை, பிரதேச செயலகம் மற்றும் மக்கள் கூடும் பொது இடங்களை மருத்துவிசிறி தொற்று நீக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

குறித்த பிரதேசத்தில் பல்வேறு அமைப்புக்கள் காணப்படும்  நிலையில் கொரோனா நெருக்கடி மற்றும் இடர் காலங்களில் இலங்கை செஞ்சிலுவைச் சங்கமே தொடர்ச்சியான சேவையினை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

You Might Also Like

நெடுந்தீவு சைவப்பிரகாச வித்தியாலய பழைய மாணவர் சங்கம் அமைப்பு!

கொடியேற்றம் கண்டார் நெடுந்தீவு பெருக்கடி ஶ்ரீ சித்தி விநாயகர் !

“நெடுந்தீவு உதைபந்தாட்ட தொடர்” – 2025 – BLACK TIGERS அணி சம்பியன் !

நெடுந்தீவு பிரதேச சபையின் நேரடி பெண் உறுப்பினர் கௌரவிப்பு!

நெடுந்தீவு மத்தி பெருக்கடி ஶ்ரீ சித்தி விநாயகர் ஆலய வருடாந்த மகோற்ஷவம் – 2025

நெடுந்தீவு புனித யுவானியார் ஆலயத்தில் முதல்நன்மை நிகழ்வு!

நயினை உற்சவகாலத்தில் கட்டடப் பொருட்களை நெடுந்தீவிற்குஎடுத்துச்செல்லும் நடைமுறை!

நெடுந்தீவு பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் சிரமதானம்.

SUB EDITOR June 16, 2021
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Previous Article யுவானியார் ஆலய வருடாந்த உற்சவ நிகழ்வுகள் ஆரம்பமாகியுள்ளது.
Next Article சிவிகே சிவஞானம் அவர்களின் நிதியுதவியில் தீவகத்தில் உலருணவு நிவாரணம்
- Advertisement -
Ad imageAd image

உங்களுக்கும் வாய்ப்பு....

உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com

பிந்திய செய்திகள்

செம்மணியில் புதையுண்ட மக்களுக்கான நீதி போராட்டம் “அணையா தீபம்”!
இலங்கையில் இரண்டு மாதங்களுக்கான எரிபொருள் கையிருப்பு உள்ளது !
நயினாதீவுக்கான கட்டடப் பொருட்களை இறக்க மாற்று துறைமுகம்!
சிறப்பாக இடம்பெற்ற பெரியதம்பனை அறநெறி பாடசாலைக்கு அடிக்கல் நாட்டும் விழா!

You Might Also Like

நெடுந்தீவு

நெடுந்தீவு சைவப்பிரகாச வித்தியாலய பழைய மாணவர் சங்கம் அமைப்பு!

June 23, 2025
நெடுந்தீவு

கொடியேற்றம் கண்டார் நெடுந்தீவு பெருக்கடி ஶ்ரீ சித்தி விநாயகர் !

June 23, 2025
நெடுந்தீவு

“நெடுந்தீவு உதைபந்தாட்ட தொடர்” – 2025 – BLACK TIGERS அணி சம்பியன் !

June 23, 2025
நெடுந்தீவு

நெடுந்தீவு பிரதேச சபையின் நேரடி பெண் உறுப்பினர் கௌரவிப்பு!

June 22, 2025
நெடுந்தீவு

நெடுந்தீவு மத்தி பெருக்கடி ஶ்ரீ சித்தி விநாயகர் ஆலய வருடாந்த மகோற்ஷவம் – 2025

June 22, 2025
நெடுந்தீவு

நெடுந்தீவு புனித யுவானியார் ஆலயத்தில் முதல்நன்மை நிகழ்வு!

June 21, 2025
நெடுந்தீவு

நயினை உற்சவகாலத்தில் கட்டடப் பொருட்களை நெடுந்தீவிற்குஎடுத்துச்செல்லும் நடைமுறை!

June 21, 2025
நெடுந்தீவு

நெடுந்தீவு பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் சிரமதானம்.

June 19, 2025

About Us

இலங்கையின் வடக்கே நெடுந்தீவை மையமாகக் கொண்டு செயற்படும் செய்தி இணையத்தளம்

Subscribe

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]

DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....

© Delftmedia All Rights Reserved.

Removed from reading list

Undo
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Lost your password?