நெடுந்தீவு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட சுற்றுலாத்துறை சார்ந்த சேவையான தங்குமிடம் வழங்குநர்களுக்கான கருத்தரங்கு வடமாகாண சுற்றுலாப் பணியகத்தால் இன்று (டிசம்பர் 14) நெடுந்தீவு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
நெடுந்தீவு பிரதேச செயலர் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் வடமாகாண சுற்றுலா பணியகத்தின் தலைவர் மற்றும் மத்திய சுற்றுலா பணியகத்தின் உதவிப் பணிப்பாளர் ஆகியோர் கலந்துகொண்டு கருத்துரைகளை வழங்கியிருந்தனர்.
இந்நிகழ்வில் சுற்றுலாத்துறை சார்ந்த சேவையான தங்குமிடம் வழங்குநர்கள் சுமார் 20 பேர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை சுற்றுலாத்துறை சார்ந்த தங்குமிட சேவை வழங்குனர்களது தங்குமிடங்களை நேரில் பார்வையிட்ட குழுவினர் மேற்கொள்ளப்படவேண்டிய திருத்தங்கள் மற்றும் ஏற்பாடுகள் தொடர்பாக விளக்கம் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளைய தினமும் பிரதேச செயலக மண்டபத்தில் இவர்களுக்கான கருத்தமர்வு இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.