நெடுந்தீவு கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட இராமேஸ்வரத்தைச் சேர்ந்த 7 மீனவர்கள், நாளை (செப். 16) வரை விளக்கமறியலில் வைக்கப்படுமாறு ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி பிரவேசித்து மீன்பிடித்த குற்றச்சாட்டின் பேரில், கடந்த ஒகஸ்ட் 13ஆம் திகதி நெடுந்தீவு அருகே குறித்த 7 மீனவர்களும் கைது செய்யப்பட்டிருந்தனர்.
இன்று (செப். 17) அவர்கள் ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது, நீதவான் நளினி சுபாஸ்கரன், அவர்களை நாளை வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.