தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் ஏற்பாட்டில் நல்லிணக்க உறவுப்பாலம் – 2025 நிகழ்வின் தொடர்ச்சியாக 04 ஆவது நாள் நிகழ்வாக நெடுந்தீவில் கடற்கரை சுத்தமாக்கல் நிகழ்வு இன்று (நவம்பர்10) வடக்கு கடற்கரை பகுதியில் இடம்பெற்றது.

இதன்போது நெடுந்தீவு பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தினர், கொழும்பு மாவட்டத்தின் இளைஞர் யுவதிகள், நெடுந்தீவு பிரதேச செயலகத்தினர், பிரதேச சபையினர், 06 கிராம அலுவலர் பிரிவகளைச் சேர்ந்த பொது அமைப்பினர் மற்றும் கடற்படையினரும் இணைந்து இச் செயற்பாட்டினை சிறப்பாக முன்னெடுந்திருந்தமை சிறப்பாகும்.


நெடுந்தீவு பிரதேச இளைஞர் கழக சம்மேளனம் ஒழுங்கமைப்பில் நெடுந்தீவு மற்றும் கொழும்பு மாவட்டத்தின் இளைஞர் யுவதிகளும் இணைந்து நல்லிணக்க உறவுப்பாலம் – 2025 எனும் ஒன்றுகூடல் நவம்பர் 12 வரை 07 நாட்கள் கொண்ட கலை கலாசார பாரம்பரிய நிகழ்வுகள், விளையாட்டுக்கள், பொதுவேலைகள் போன்றன இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

