நெடுந்தீவு பிரதேச செயலகப் பிரிவில் ஏற்பட்ட இடர் நிலைமை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவிகள் நெடுந்தீவு பிரதேச செயலகம் ஊடாக பல வழிகளில் கிடைக்கப்பெற்று அவை பகிர்ந்தளிக்கபட்டுள்ளது.
இவ்வாறு தொண்டுசார் பொது அமைப்புகள் மற்றும் நலன்விரும்பிகளிடம் இருந்துகிடைக்கப்பெற்ற நிவாரணப் பொருட்களை பாதிக்கப்பட்டவர்களுக்குபகிர்ந்தளிக்கும் நிகழ்வு கடந்த வாரம் பிரதேசசெயலக மாநாட்டு மண்டபத்தில்இடம்பெற்றது.
அந்தவகையில்,
யாழ் இந்துக் கல்லூரியின் பழைய மாணவர் சங்கம்,
யாழ் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானபீட 32 & 33 அணி,
Dr.சிவச்சந்திரன் (இங்கிலாந்து) அவர்களின் ஊடாக பெயர்குறிப்பிடப்படாதநலன்விரும்பி
யாழ் வேம்படி மகளிர் கல்லூரியின் 2005 ஆம் ஆண்டுஉயர்தரபாடசாலைமாணவிகள்
JASC யாழ் சமூக செயற்பாட்டு மையம்
நெடுந்தீவு ஊரும் உறவும் அமையம்
நலன்விரும்பி K.T.முரளிதரன் மற்றும் பவி(கனடா )
ஆகிய வழிகளில் மக்களுக்கான உதவிக்கரங்கள் ஒன்றிணைந்திருந்ததாக நெடுந்தீவு பிரதேச செயலக செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.